Google

Monday, June 28, 2010

ல் என்பத

ல் என்பது காமத்தின் நாசூக்கான வெளிப்பாடுதான் என்கிற என்னுடைய இத்தனை வருட புரிதலில், வி.தா.வ சற்று சலனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. படைப்பையும் படைப்பாளியையும் இணைத்து யோசிக்கக்கூடாது' என்கிற அரதப்பழசான தருக்கத்திற்கு உட்படாத விமர்சனக் கோட்பாடுகளை தூக்கியெறிந்துப் பார்த்தால் கெளதம் நிச்சயமாக யாரையோ முதல் பார்வையிலேயே கண்டு விழுந்து விழுந்து காதலித்திருக்கிறார்; தோல்வியடைந்திருக்கிறார்; அதிலிருந்து மீண்டிருக்கிறார் என்பதை அவருடைய முதல் படத்திலிருந்து அவதானிக்கும் போது தெரிகிறது. 'மின்னலே'யில் மாதவனின் அந்த துடிப்பு நிஜமாக இருக்கிறது. குற்ற பின்ணணிகளில் நிகழ்ந்தாலும் 'காக்ககாக்கவிலும்' .வேட்டையாடு விளையாடு'விலும் காதல் சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரத்யேகமாக தனித்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டன.

சமகாலநிகழ்வையும் திரைப்படத்தினுள்ளே வரும் ஒரு திரைப்படத்தையும் நான்-லீனியர் கலவையில் பிசைந்திருந்த விதாவி-ன் திரைக்கதை உத்தி எனக்குப் பிடித்திருந்தது. சிம்பு-திரிஷாவின் காதலை நெடுகச் சொல்லிக் கொண்டு செல்லும் திரைக்கதை சடக்கென்று தண்டவாளம் மாறி அதே பாவனையில் சிம்பு இயக்கும் படத்தின் காட்சிகளாக தொடர்வதும் இறுதியில்தான் அது பார்வையாளர்களுக்கு வெளிப்படுவதும் நல்ல உத்தி. சற்று zoom out செய்து பார்த்தால் கெளதமின் காதலே திரையில் விரிவடைந்தாகவும் இதனைக் கொள்ளலாம். ஒரே படத்தில் மூன்று காதல் கதைகள்.

ரொம்ப வருடங்களாக நம் கண்ணே முன்னேயே மார்க்கெட்டிலும் நிழல் சந்துகளிலும் ரவுடியாக திரிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன், திடீரென்று வெள்ளை சட்டையும் டக்இன்னுமாக பச்சை சவர வாசனையுடன் நம் வீட்டிற்கு வந்து "சார், நான் சாப்ட்வேர் கம்பெனில சேர்ந்திருக்கேன். ஸ்dsfsdவீட் எடுத்துக்குங்க"... என்றால் எப்படி நமக்கு மகா ஆச்சரியமாய் இருக்குமோ, அப்படியிருக்கிறது சிம்புவைப் பார்த்து. (சாப்ட்வேர் கம்பெனியில் பணிபுரிவதுதான் சமூகத்தின் உயர்ந்த பணியா, அப்படியெனில்.. என்று யாரும் நுண்ணரசியலை தேட வேண்டாம்; சட்டென்று தோன்றின உதாரணமிது). அவரின் வழக்கமான எரிச்சலூட்டும் உடல்மொழிகள் இதில் இல்லாமலிருப்பது ஒர் ஆறுதல்.

ஒரு சமகால காதல் அவதி இளைஞனை யதார்த்தத்திற்கு மிக நெருக்கமாக திரையில் பிரதிபலித்திருந்தார் சிம்பு. காதல் ஏற்றுக் கொள்ளப்படும் வரைக்குமான இவரின் தவிப்பும் பின்பான நிராகரிப்பின் வேதனையும் எதிர்ப்புகள் தரும் சோர்வையும் தனக்காக திருமணத்தை நிறுத்தி விட்டாள் என்பதை அறியும் போது மகிழ்ச்சியும்.. என நிஜமான ஒரு பாத்திரம். இப்படி இவர் அருவி மாதிரி பொங்கிக் கொண்டிருக்க மறுமுனையில் திரிஷா பக்கெட் நீர் மாதிரி மொண்ணைத்தனத்தோடு இருந்தது எரிச்சலாக இருந்தது. அந்த நடுஇரவில் வீட்டிற்கு வெளியே, "ஏன் தன்னை அவன் திருமணம் செய்து கொள்ள முடியாது?' என்று விளக்குகிற (பின்பு சிம்பு கைபேசியை தூக்கியெறிந்து உடைக்கிற) காட்சியில் மாத்திரமே அவர் நடிப்பு சிறப்பாக இருந்தது. சிம்புவின் நண்பராக வரும் கணேஷின் (தயாரிப்பாளர்களில் ஒருவர்) யதார்த்தமான நடிப்பும் பேச்சுமொழியும் சுவாரசியமானதாக இருந்தது.

ரஹ்மானின் 'ஷாம்பெயின்' வழியும் பாடல்கள் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக 'ஹோசன்னா' பாடலும் அது படமாக்கப்பட்ட விதமும் பின்னணி நிலப்பரப்புகளும் மிக அருமை. தமிழத்திரைக்கு புதிய பாணி வரவான 'ஆரோமலே' பாடலும் சிறப்பாக பயன்படுத்தப்பட்டிருந்தது. அரதப்பழசான கருப்பொருளாக இருந்தாலும் ஒரு இயக்குநரால் நுண்ணுனர்வுகள் நிரம்பிய காட்சிகளோடு அதை ஒரு உன்னத அனுபவமாக்க முடியும் என்பதற்கு இந்தப்படம் மிக கச்சிதமானதொரு உதாரணம்.

மேலே எனது வயதைக் குறிப்பிட்டிருந்தேன் இல்லையா? இதுவரை அழகான, திடகாத்திரமானதொரு பெண் எதிரே வந்தால், உடனே உலக சினிமாவின் சப்-டைட்டிலை வாசிப்பது போல் (நன்றி பேயோன், டிவிட்டர்) முகத்திலிருந்து சற்று இறங்குமுகமாகவே நோக்கத்தெரிந்த எனக்கு, எல்லாவற்றையும் உதறிவிட்டு யாரையாவது துரத்தி துரத்தி புனிதமாக காதலிக்க வேண்டும் போலிருந்தது. அந்தளவிற்கான மனவெழுச்சியை ஏற்படுத்தியது விதாவ. 


No comments: